நடிகர் விஜய்யின் 69-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய அரசியல் வருகையால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் - 69 படத்துடன் அவர் சினிமாவிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.
விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார்.
விஜய் - வினோத் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்தே உருவாக உள்ளதாம்.
இப்படத்தில் நடிக்க நடிகைகள் சமந்தா, ஆலியா பட் இருவரையும் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளனராம். இந்த நிலையில், விஜய் - 69 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியளவில் இப்படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக படத்தின் பட்ஜெட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.