செய்திகள்

‘மனிதத் தன்மையற்ற செயல்..’ ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகர்ஜுனா!

DIN

நடிகர் நாகர்ஜுனாவிடம் நெருங்கிய ரசிகரைப் பாதுகாவலர் கீழே தள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா தற்போது, தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். நாயகனாகவும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 23) ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்த நாகர்ஜுனாவிடம் ரசிகர் ஒருவர் திடீரென நெருங்கினார். இதை நாகர்ஜுனா கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவரின் பாதுகாவலர் அந்த ரசிகரைப் பின்னால் இழுத்தார்.

இதில் நிலை தடுமாறிய ரசிகர் கீழே விழச்சென்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் எதுவும் நடக்காததுபோல் சென்ற நாகர்ஜுனாவைக் குறிப்பிட்டு மனிதத் தன்மையற்ற செயல் என ரசிகர்கள் அவரைக் கண்டித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சையைக் கண்ட நடிகர் நாகர்ஜுனா தன் எக்ஸ் பக்கத்தில், “இப்போதுதான் இது என் கவனத்திற்கு வந்தது. கண்டிப்பாக இப்படி நடந்திருக்கக் கூடாது. நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்கிறேன். இனி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் காலமானார்!

‘நிர்வாணப் படத்தை அனுப்பு’: அக்‌ஷய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்!

11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே... கே.எல்.ராகுல் கூறுவதென்ன?

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?- இபிஎஸ்

மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ்! புதிய இணையத் தொடர் துவக்கம்!

SCROLL FOR NEXT