அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!
நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடிக்க உள்ளனர்.
நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் காதல் கதையில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்க உள்ளனர்.
படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைக்க உள்ளதாகத் தகவல்.