செய்திகள்

ஓராண்டுக்கு முன்பே முடிவுக்கு வந்த பிரபல தொடர்!

2021-ல் மலையாளத் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை அஸ்வதி.

DIN

இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மோதலும் காதலும் தொடர் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட காட்சியிடன் இந்தத் தொடர் 304 நாள்கள் ஒளிபரப்பானது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு மோதலும் காதலும் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

நாயகியாக அஸ்வதியும் (வேதா), நாயகனாக சமீர் அகமதுவும் (விக்ரம்) நடித்த இந்தத் தொடர், இளைய தலைமுறையினரிடையே மிகுந்த வரவேபைப் பெற்றது. இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் அதிக வரவேற்பைப் பெற்றன.

மோதலும் காதலும் தொடரின் போஸ்டர்

பள்ளி செல்லும் பெண் குழந்தையுடன் இருக்கும் விவாகரத்து ஆன ஆண் தொழிலதிபர் மற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர் இடையே நடக்கும் கதைதான் மோதலும் காதலும்.

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தத் தொடரில் விக்ரம், வேதா ஆகிய இருவருக்கு இடையேயான மோதல் நிறைந்த காதல் காட்சிகளும், பின்னர் குழந்தைக்காக சமசரசம் செய்துகொள்ளும் காட்சிகளும் பல ரசிகர்களைக் கவர்ந்தது.

கடந்த ஆண்டு எப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பான இந்தத் தொடர் 304 எபிஸோடுகளுடன் முடிவடைந்துள்ளது.

மோதலும் காதலும் தொடரின் இறுதிக் காட்சி

நாயகி அஸ்வதிக்கு மோதலும் காதலும் தொடரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு மலையாளத் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானாலும், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும் மோதலும் காதலும் தொடரின் மூலமே தற்போது நட்சத்திர தகுதியைப் பெற்றுள்ளார்.

நடிகை அஸ்வதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT