முகப்பு
செய்திகள்

கை, கால் செயலிழப்பு: பிரபல நடிகருக்கு உதவிய சிம்பு!

Updated On : 26 ஜூன் 2024, 3:55 pm IST
பகிர்:

நடிகர் சிம்பு பிரபல நகைச்சுவை நடிகரின் மருத்துவத்திற்காக பண உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் துணை நகைச்சுவை நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். நடிகர் வலுவேலுவின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளில் அவருக்குத் துணையாக நடித்திருப்பார்.

சீனா தானா, கந்தசாமி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் கவனம் பெற்றன. தொடர்ந்து, வடிவேலுவின் சினிமா வாழ்வில் ஏற்பட்ட தடை காரணமாக வெங்கல் ராவுக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

Advertisement

Advertisement

தற்போது, உடல்நலக்குறைவால் இவருக்கு கை, கால் செயலிழந்துள்ளது. இதற்காக, சிகிச்சை பெற பலரிடமும் வெங்கல் ராவ் உதவி கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், வெங்கல் ராவின் நிலைமையை அறிந்த நடிகர் சிம்பு அவருடைய மருத்துவ உதவிக்காக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.