பிரபு தேவா, அஞ்சு குரியன்.  படங்கள்: யூடியூப் / டி சீரிஸ் தமிழ்
செய்திகள்

பிரபு தேவாவின் 60ஆவது படம்: முதல் பாடல் வெளியானது!

பிரபு தேவாவின் ‘உல்ஃப்’ படத்தின் வெண்ணிலவே பாடல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம் உருவாகிவரும் நிலையில், தற்போது புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிஹைண்ட்வுட்ஸ் வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார். மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் 60ஆவது படமாக 2023இல் உருவான 'உல்ஃப்' படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை முகேன் ராவ் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் அஞ்சு குரியன், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா ஆகியோர்  நடித்துள்ள இதில் நடித்துள்ளனர்.

வினோ வெங்கடேஷ் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Sep 07 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கூலி படத்தின் சிக்கிடு விடியோ பாடல்!

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

SCROLL FOR NEXT