‘டாப் 10’ இந்திய திரைப்படங்கள். 
செய்திகள்

முதல்நாளில் அதிக வசூல்: ‘டாப் 10’ இந்திய திரைப்படங்களில் ஒரேயொரு தமிழ்ப்படம்!

கல்கி 2898 ஏடி திரைப்படம் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ளது.

DIN

இந்தியாவில் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் உச்ச நட்சத்திரங்களின் படம் என்றால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். முதல்நாளில் அதன் வணிகம் பிரமிக்க வைக்கும்.

இந்திய அளவில் வெளியான திரைப்படங்களில் முதல்நாள் வசூலில் (உலகம் முழுவதும் வசூலித்த கணக்கின் அடிப்படையில்) ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. ரூ.223 கோடி வசூலினை இதுவரை எந்த இந்திய திரைப்படங்களும் முறியடிக்கவில்லை.

இந்தப் பட்டியலில் பிரபாஸ் நடிப்பில் நேற்று (ஜூன் 27) வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரேயொரு தமிழ்ப்படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 10ஆவது இடத்தில் அனிமல் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

லியோ

முதல்நாளில் அதிகமாக வசூலித்த இந்திய திரைப்படங்களின் வரிசை:

  1. ஆர்ஆர்ஆர் - ரூ. 223 கோடி

  2. பாகுபலி 2 - ரூ. 214 கோடி

  3. கல்கி 2898 ஏடி - ரூ. 191 கோடி

  4. சலார் - ரூ. 165 கோடி

  5. கேஜிஎஃப் 2- 162 கோடி

  6. லியோ - ரூ.142 கோடி

  7. ஆதிபுரூஷ் - ரூ.136 கோடி

  8. ஜவான் - ரூ.129 கோடி

  9. சாஹோ - ரூ. 125 கோடி

  10. அனிமல் - ரூ. 115 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT