கல்கி 2898 ஏடி போஸ்டர் 
செய்திகள்

‘கல்கி 2898 ஏடி’ முதல்நாள் வசூல் சாதனை!

கல்கி 2898 ஏடி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

DIN

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.

பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சலார் ஆதிபுரூஷ் படங்களின் வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல்நாளில் ரூ. 223கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் படங்களில் இதுதான் அதிக வசூலிட்டியதாக உள்ளது. இந்திய அளவில் முதல்நாளில் வசூலில் 3ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT