கல்கி 2898 ஏடி போஸ்டர்.  
செய்திகள்

எதிர்பார்த்ததைவிட அதிக வசூல்: ‘கல்கி 2898 ஏடி’ படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

கல்கி 2898 ஏடி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.

பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்த நிலையில் படக்குழு ரூ.191.5 கோடி வசூலித்ததாக போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT