செய்திகள்

அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.. யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

DIN

நடிகை நிவேதா பெத்துராஜின் நேர்காணல் பதில் வைரலாகியுள்ளது.

மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.

பின், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் நிவேதா பெத்துராஜுக்கு துபையில் ரூ. 50 கோடி மதிப்பில் சொகுசு பங்களா வாங்கிக் கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில் அதிகம் பேசப்பட்டார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து நிவேதா விளக்கமும் அளித்தார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிவேதா பெத்துராஜ், “நான் என்ன எதிர்மறையாக நினைத்தாலும் அது நடந்துவிடும். என்னுடைய பாய் ஃபிரண்ட் என்னை ஏமாற்றிவிடுவான் என்றும் யாருக்காக என்னைவிட்டுச் செல்வான் என்பதையும் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதேபோல், அவன் என்னை ஏமாற்றி இன்னொருவருடன் சென்றுவிட்டான். இப்படி, நான் யோசிப்பது எல்லாம் எப்படியோ நடந்துவிடும். இப்போது வைத்திருக்கும் காரிலிருந்து எதிர்காலத்தில் வாங்க உள்ள கார் வரை நான் கற்பனை செய்து வைத்திருந்தவைதான்” எனக் கூறியுள்ளார்.

இந்த நேர்காணலைப் பார்த்த ரசிகர்கள், நிவேதா பெத்துராஜ்ஜை ஏமாற்றிச் சென்ற அவரின் பாய் ஃபிரண்ட் யார் என இணையத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT