செய்திகள்

நிபந்தனையற்ற அன்பு: மஞ்சுமெல் பாய்ஸ் நாயகன் நெகிழ்ச்சி!

மஞ்சுமெல் பாய்ஸ் நாயகன் சௌபின் ஷகீர் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

DIN

மஞ்சுமெல் பாய்ஸ் நாயகன் சௌபின் ஷகீர் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

2017இல் பறவ எனும் படத்தினை இயக்கியவர்தான் சௌபின் ஷகீர். பின்னர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த சுடானி பிரம் நைஜீரியா, கும்பளாங்கி நைட்ஸ், ரோமான்ச்சம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

கடந்த வாரம் (பிப்.22) வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் ஷகீர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இந்நிலையில் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு பதிவிட்டுள்ளார்.

அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. என்னுடைய எல்லா நல்ல, கெட்ட நேரங்களிலும் என்னுடன் இருக்கிறீர்கள். எல்லா சவாலான நேரங்களிலும் விடாமுயற்சியும் நம்பிக்கையும் எனக்கு அளித்துள்ளீர்கள். வாழ்க்கையை எனக்கு காட்டியதற்கும் அதில் பயணிக்கவும் கற்றுத் தந்ததுக்கு மிக்க நன்றி அப்பா. உங்களது நிபந்தனையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் உரித்தானவனாக நான் இருப்பதற்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களும் எப்போதும்போல எங்களுக்கு உத்வேகமளிக்கும் ஆண்டாக உங்களுக்கு அமைய வேண்டும். நீங்கதான் எப்போதும் எனது சிறந்த நாயகன். உங்களை நேசிக்கிறேன் அப்பா” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

சாலையில் தேங்கிய மழைநீா்; மாணவா்கள் அவதி

லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்

செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்

வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

SCROLL FOR NEXT