செய்திகள்

சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ் நடிக்கும் புதிய தொடரின் ப்ரோமோ!

சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ் நடிக்கும் புதிய தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

DIN

சஞ்சீவ் வெங்கட் மற்றும் ஸ்ருதி ராஜ் இருவரும் தொலைக்காட்சி மற்றும் சினிமா இரண்டிலும் நன்கு அறியப்பட்ட முகம்.

'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.

இவர் மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், பெண், சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் பிரதான வேடங்களில் நடித்துள்ளார்.

கிழக்கு வாசல் தொடரில் நடிக்கவிருந்த சஞ்சீவ், திடீரென அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது வானத்தைப்போல தொடரில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

அதேபோல், தென்றல் தொடரில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ஸ்ருதி ராஜ். இவர் நடித்த ஆஃபிஸ் தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதனைத் தொடர்ந்து அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு உள்ளிட்ட தொடர்களிலும் ஸ்ருதி ராஜ் நடித்தார்.

தொடர்ந்து, இவர் நடித்த அபூர்வ ராகங்கள், தாலாட்டு தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடிக்கும் புதிய தொடர் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடருக்கு லட்சுமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. லட்சுமி தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இத்தொடரில் நடிகை நித்யா, நேஹா மேனன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் இத்தொடர் தொடங்கும் தேதி, ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT