முகப்பு
செய்திகள்

சினிமா நடிகை அனுபமாவைப்போல் மாறிய சின்னத்திரை நடிகை!

புதிய தோற்றத்தில் நடிகை செளந்தர்யா ரெட்டி

Updated On : 4 மார்ச், 2024 at 11:22 AM
பகிர்:

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தோற்றத்தைப்போன்று மாறிய சின்னத்திரை நடிகை செளந்தர்யா ரெட்டியின் விடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

'டில்லு ஸ்கொயர்' என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள 'ராதிகா..' என்ற பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுருள் முடியுடன் நடனமாடுவது வைரலாகி வருகிறது. (இயல்பிலேயே சுருள்முடியுடையவர் நடிகை அனுபமா)

டில்லு ஸ்கொயர் படத்தில் அனுபமா பரமேஸ்வரன்

அனுபமாவின் தோற்றத்தைப்போன்று சுருள் முடியுடன் நடிகை செளந்தர்யா விடியோ வெளியிட்டுள்ளார். இந்த விடியோவுடன் ராதிகா என்ற பாடலையும் இணைத்துள்ளதால், பலர் இதில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சாதாரண விடியோவுக்காக, ஒப்பனை செய்து, இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்ட செளந்தர்யாவின் முயற்சியை பலர் பாராட்டினாலும், அனுபமாவின் ரசிகர்கள் சிலர் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

ஒப்பனை அறையில் நடிகை செளந்தர்யா ரெட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை செளந்தர்யா ரெட்டி. இவர் தெலுங்கில் முன்னணி தொடர்களில்ல் நாயகியாக நடித்தவர். கன்னட மொழித் தொடரிலும் நாயகியாக நடித்துள்ளார்.

செளந்தர்யா ரெட்டி வெளியிட்டுள்ள விடியோவிலிருந்து..
மீனாட்சி பொண்ணுங்க தொடரி்ல் - விருதுடன் செளந்தர்யா ரெட்டி

தற்போது 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அந்தத் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் செளந்தர்யா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →