செய்திகள்

தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகல்?

நடிகர் துல்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில், த்ரிஷா, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் துல்கர் சல்மான் தன் அடுத்த பட பணிகளில் இருப்பதாலும் அதிக நாள்களை தக் லைஃப் படத்திற்கு ஒதுக்க முடியாது என்பதற்காகவும் இப்படத்திலிருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

SCROLL FOR NEXT