நீ செய்யும் எல்லாமும் எனக்குப் பெருமை: ஜோதிகாவைப் புகழ்ந்த சூர்யா!
நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.
தற்போது மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் ‘சைத்தான்’ படம் உருவாகியுள்ளது. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரமாண்டமாக இந்தப் படம் உருவாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
2006-ஆம் ஆண்டு ஜோதிகாவும் சூர்யாவும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தியா (17) மகளும், தேவ் (14) என்ற மகனும் இருக்கிறார்கள்.
ஜோதிகாவின் சைத்தான் பட போஸ்டருடன் நடிகர் சூர்யா பெண்கள் தினத்தினை முன்னிட்டு, “எனது மனைவி, எனது பலம். சைத்தான் படத்துடன் புதிய தொடக்கம். நீ செய்யும் எல்லாவற்றுக்கும் நான் பெருமைப்படுகிறேன். அதிகமான மரியாதையும் அன்பும் ஜோதிகா” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.