முகப்பு
செய்திகள்

தாய்லாந்தில் படப்பிடிப்பைத் துவங்கிய ‘குபேரா’ படக்குழு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் குபேரா படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது.

செய்திகள்

தாய்லாந்தில் படப்பிடிப்பைத் துவங்கிய ‘குபேரா’ படக்குழு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் குபேரா படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 7:13 AM
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் குபேரா படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் கேப்டன் மில்லர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறைவைக்கவில்லை. இதற்கிடையே தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் தனது 50-வது படமான ராயன் என்கிற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தனுஷின் - 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்தின் பெயர் குபேரா என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் துவங்கியதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உடன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →