DOTCOM
செய்திகள்

கமல் பாடல் வரிகள், ஸ்ருதிஹாசன் இசை.. நடிகராகும் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து புதிய பாடலை உருவாக்கியுள்ளனர்.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. 

இதற்கிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இது என்னவென்று புரியாமல் இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ராஜ்கமல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைப்பதாகவும் அறிமுகம் லோகேஷ் கனகராஜ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்து பாடலில் தோன்றப்போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள்! குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்

கனமழையுடன் துவங்கிய புத்தாண்டு! தெருக்களில் ஓடும் வெள்ள நீர்! | Indonesia

துரந்தர் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT