படம்: இன்ஸ்டாகிராம்/ ஸ்வேதா சிங்
செய்திகள்

‘45 மாதங்கள் ஆகின்றன; நீதி வேண்டும்’ - பிரதமரிடம் கோரிக்கை வைத்த சுஷாந்த் சிங்கின் சகோதரி!

பிரதமர் மோடியிடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

DIN

பிரதமர் மோடியிடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவகல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவரது எம்.எஸ்.தோனி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற திரைப்படமாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அப்படத்தில் அவர் தோனியாகவே வாழ்ந்ததாக சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

சமீபத்தில், “ சுஷாந்த் சிங் தற்கொலை செய்தமாதிரி இல்லை. கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது உடலை பார்த்ததும் எனக்கு தோன்றியது. இரவில்தான் அவர்கள் உடற்கூராய்வை செய்தனர். அவர்கள் மொபைலில் புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொண்டனர். விடியோ எடுக்கவில்லை. சரியான முறையில் அவர்கள் இதை செய்யவில்லை” என பிணவறை தொழிலாளர் ரூப்குமார் ஷா என்பவர் சர்சைக்குள்ளான கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் சகோதரி தங்கை ஸ்வேதா சிங் கிர்டி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார். அதில், “எனது சகோதரர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து 45 மாதங்கள் ஆகின்றன. இன்னும் அதற்காக நீதி கேட்டு போராடுகிறோம். பிரதமர் மோடி அவர்களே, சிபிஐ விசாரணையின் முன்னேற்றம் குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். சிஷாந்த்தின் மரணத்துக்கு நீதி கேட்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT