அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்: ரஜினிகாந்த்
அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்றி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர், லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனத் தகவல் வெளியானது.
Advertisement
இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.