DOTCOM
செய்திகள்

தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தும் தேவி ஸ்ரீ பிரசாத்!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் படங்களுக்கு இசைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

DIN

தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் இனிது இனிது காதல் இனிது படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து, ஆறு, கந்தசாமி, அலெக்ஸ் பாண்டியன், சிங்கம், சிங்கம் - 2, வில்லு படங்களுக்கு இசையமைத்து வெற்றியும் பெற்றார்.

ஆனால், சில ஆண்டுகள் தமிழ் படங்களில் பணியாற்றாமல் தெலுங்கு படங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார். அங்கும், இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தமிழுக்கு வரும் தேவை குறைந்திருந்தது.

தற்போது, கங்குவா, ரத்னம், குபேரா, அஜித்குமாரின் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால், தமிழ்ப் படங்களில் இசையமைக்க தேவி ஸ்ரீ பிரசாத் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

SCROLL FOR NEXT