செய்திகள்

பெண் இயக்குநர் படத்தில் சமந்தாவுக்குப் பதிலாக பூஜா ஹெக்டே!

பிரபல தெலுங்குப் பட இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தாவுக்கு பதிலாக பூஜா ஹெக்டே இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரபல தெலுங்குப் பட இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தாவுக்கு பதிலாக பூஜா ஹெக்டே இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். ஓராண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ள சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்ஸர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா பிரபல தெலுங்குப் பட இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக இருந்தது. பின்னர் அவரது உடல்நிலை காரணத்தினால் அவருக்குப் பதிலாக பூஜா ஹெக்டேவை படக்குழு தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019இல் சமந்த நடிப்பில் வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தினை இயக்கியவர்தான் நந்தினி ரெட்டி. பிட்ட கதலு எனும் இணையத்தொடரிலும் மீரா எனும் கதையை இயக்கியிருந்தார்.

நந்தினி ரெட்டி இயக்கவுள்ள புதிய படத்தில் முதலில் சமந்தாவை தேர்வு செய்யவிருந்ததாகவும் தற்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவருக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே சரியாகவிருக்கும் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT