மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
முதல்வாரத்தில் கவனம் பெற்ற இப்படம் இதுவரை தமிழகத்தில் 500 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாள சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு மலையாளப் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூல் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,மலையாள சினிமா வரலாற்றிலேயே ரூ. 200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ்.