செய்திகள்

யாகந்தி கோயிலில் புஷ்பா 2 படப்பிடிப்பு: ராஷ்மிகா பகிர்ந்த அப்டேட்!

நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022இல் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. சமந்தாவின்  'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு  தெரிவித்திருந்தது.

புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டதும்.  படக்குழு புஷ்பா - 2 திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. புஷ்பா 2வில் நடிக்க அவரது சம்பளம் உயர்த்தியதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் புஷ்பா 2 குறித்த அப்டேட்டினை பதிவிட்டுள்ளார். ஆந்திராவில் உள்ள ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயிலில் படப்பினை முடித்துள்ளார். அதன் புகைப்படத்தினை ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்றைய நாளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. யாகந்தி கோயிலில் இன்று படப்பிடிப்பு நடத்தினோம். இந்த இடத்தின் வரலாறு பிரமிக்கத்தக்கது. இந்த இடம், இந்த இடத்தின் மக்கள், அவர்களது அன்பு மற்றும் அங்கு நேரம் செலவிட்டது மிகவும் அற்புதமாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT