படங்கள்: எக்ஸ்
செய்திகள்

சேச்சி, சேட்டன்மார்களே... மலையாளத்தில் பேசிய நடிகர் விஜய்!

கேரளத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள நடிகர் விஜய் அங்கு ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசியுள்ள விடியோ வைரலாகி வருகிறது.

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றன. தற்போது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

14 ஆண்டுகளுக்குப் பின் கேரளத்தில் உள்ள தன் ரசிகர்களை விஜய் சந்தித்தபோது ரசிகர்கள் விசிலடித்து உற்சாகம் செய்தனர். தினமும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ஒரு குழந்தையை தூக்கிவைத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு நடிகர் விஜய் கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.

மலையாளத்தில் விஜய் பேசியது என்ன?

சேச்சி, சேட்டன்மார்களே. உங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்களோ, உங்கள் முகத்தினை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் எனது நண்பா நண்பிகளைப் போலவே நீங்களும் வேற லெவல். உங்களது அன்புக்கு கோடான கோடி நன்றி எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT