செய்திகள்

நியாயமா லோகேஷ் இது?: கிண்டல் செய்த நடிகை காயத்ரி!

நடிகை காயத்ரி இயக்குநர் லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இதில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் என்று ராஜ்கமல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதன் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் இது லோகேஷ் தானா என ஆச்சரியம் படுமளவுக்கு அவர் ரொமான்ஸில் கலக்கி இருப்பதாக கூறிவருகிறார்கள்.

இதனை நடிகை காயத்ரி, “ உங்கப் படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு... வாட் இஸ் திஸ் மா?” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்கள் பகிர்ந்த மீம்ஸ் ஒன்றினையும் மறுபதிவிட்டுள்ளார். அதில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் காயாத்ரியை எடிட் செய்திருந்தார்கள். 96 ஜானு ரோலக்ஸிடம் அவர் பேரு லோகேஷ் என சொல்லுவது போல எடிட் செய்திருக்கிறார்கள்.

வழக்கமாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் காதலிப்பவர்களை கொலை செய்துவிடுவார் என விமர்சனம் இருக்கிறது. இதனை வைத்து தற்போது பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

விக்ரம் படத்தில் காயத்ரியின் தலை வெட்டப்படும் காட்சி மிகுந்த கிண்டலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT