செய்திகள்

யாஷிகாவின் ‘படிக்காத பக்கங்கள்’ டீசர் அப்டேட்!

நடிகை யாஷிகா ஆனந்த்தின் படிக்காத பக்கங்கள் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் தொலைக்காட்சி மூலமாகப் பிரபலமான நடிகை யாஷிகா, சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தேவர்கொண்டாவின் நோட்டா, ஜாம்பி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றன.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்ற யாஷிகாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு மட்டும் யாஷிகா நடிப்பில் பஹீரா, சைத்ரா, சில நொடிகள், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய 4 படங்கள் வெளியானது.

தற்போதும் 4 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் செல்வம் மதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் எனும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ப்ரஜின் நாயகனாக நடித்துள்ளார்.

எஸ் மூவி பார்க், பௌர்ணமி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மார்ச் 24ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT