முகப்பு
செய்திகள்

ஹாட் ஸ்பாட் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!

அடியே பட இயக்குநரின் புதிய படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் நிறுவனம் ஏ அளித்துள்ளது.

Updated On : 27 மார்ச், 2024 at 2:17 PM
பகிர்:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தினை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். இந்தப் படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. சமீபத்தில் இதே மாதிரி சென்னையில் ஒரு ஐடி பெண்ணை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டம் இரண்டு படத்துக்குப் பிறகு அடியே படத்தினை இயக்கினார். ஜி.வி.பிரகாஷ், கௌரி கிஷன் நடித்த இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

தற்போது புதிய படம் ஒன்றினை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக். இதற்கு ஹாட் ஸ்பாட் எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் நடிகர்கள் கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம் இவர்களுடன் நடிகைகள் கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்இ.

இந்தப் படத்தின் டிரைலர் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஆபாசம் நிறைந்ததாக பலரும் விமர்சித்தார்கள். சிலர் இதெல்லாம் தேவையான கருத்துகள் என்றும் இணையத்தில் பேசுபொருளானது. யூடுயூப்பிலும் டிரெண்டானது.

சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது.

சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். தணிக்கைச் சான்றிதழ் நிறுவனம் ஏ அளித்துள்ளது. 18 வயதுக்கு குறைவானவர்கள் படத்தினை பார்க்கக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.