DOTCOM
செய்திகள்

அஜித்குமார் பாய்ஸ்!

நடிகர் அஜித்குமார் இருசக்கர வாகனப் பயணத்தில் இருக்கிறார்.

DIN


துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார்.

இருசக்கர வாகனத்தில் உலகைச் சுற்றும் திட்டத்தின் ஒருபகுதியாக மீண்டும் நடிகர் அஜித் தன் பயணத்தைத் துவங்கியுள்ளதாக சமீபத்தில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இது தொடர்பான, புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.

அஜித் நடத்திவரும் வீனஸ் மோட்டோ டூர்ஸ் நிறுவனத்தில் இணைந்து பயணப்படும் புதிய பைக்கர்களையும் அஜித் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அதில், நடிகர் ஆரவ்வும் இருக்கிறார்.

இந்த நிலையில், புதிய பைக்கர்களுடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT