DOTCOM
செய்திகள்

கேம் சேஞ்சர் முதல் பாடல்!

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில்தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடலை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழில் விவேக் எழுதிய பாடல் வரிகளை டேல் மெந்தி, பூஜா வெங்கட் ஆகியோர் பாடியுள்ளனர். பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானியின் நடனம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT