நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகனாக நடித்தார். முக்கியமான நடிகராக வலம் வந்தவர் அடுத்தடுத்த தோல்விப் படங்களைக் கொடுத்ததால் மார்க்கெட் இழந்தார்.
ஆனால், சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்துள்ளாராம்.
இதற்கிடையே, சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதரியைக் காதலித்து வந்தார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தங்களது சமூகவலைதள கணக்கில் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படங்களை பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.