செய்திகள்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

மறுவெளியீட்டு படங்களில் விஜய்யின் கில்லி பட வசூலை அஜித்தின் 3 படங்களும் இணைந்து முறியடிக்க தவறியுள்ளது.

DIN

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் - த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கில்லி இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியளவில், மறுவெளியீடான திரைப்படம் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல் முறை.

இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளில் வெளியான தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய படங்கள் முதல் நாளில் முறையே ரூ.50லட்சம், ரூ.14லட்சம், ரூ.25 லட்சங்கள் மட்டுமே வசூலித்தன.

ஆனால் கில்லி திரைப்படம் முதல்நாளில் ரூ.1.25 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் கில்லி படத்தின் வசூலினை முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT