முகப்பு
செய்திகள்

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

நடிகர்கள் அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Updated On : 3 மே, 2024 at 5:52 PM
பகிர்:
Updated On : 3 மே, 2024 at 5:40 PM

ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். 

Updated On : 3 மே, 2024 at 5:43 PM

தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினி காந்த்தின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Updated On : 3 மே, 2024 at 5:48 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.