செய்திகள்

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் அப்புக்குட்டி அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றதுடன், தேசிய விருதையும் வென்று அசத்தினார். அதன்பின், குணச்சித்திர மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபாடிக்குழு, குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட படங்கள் கவனத்தைப் பெற்றது. நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, கதை நாயகனாக ராஜு சந்திரா இயக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்புக்குட்டி பிண தோற்றத்தில் சிரித்தபடி பாடையில் அமர்ந்திருக்கிறார். பிறந்தநாளில் இப்படியான போஸ்டரை வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT