செய்திகள்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

பாகுபலி அனிமேஷன் படத்தில் பிரபாஸின் முகம் தோனியை போலவே இருக்க காரணம் குறித்து ராஜமௌலி பதிலளித்துள்ளார்.

DIN

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாகுபலி. இதன் 2 பாகங்கள் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் பாகுபலி அனிமேஷன் தொடராக வெளியாகவிருக்கிறது. இதில் பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸின் முகம் சிஎஸ்கே அணியின் வீரர் முன்னாள் இந்திய கேப்டனுமான தோனியைப் போலவே இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து தோனியை பிடித்ததால் இப்படி உருவாக்கினீர்களா என்ற கேள்வி ராஜமௌலியிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி, “என்னைப் போலவே இந்தக் கதாபாத்திரத்தை அனிமேஷனில் உருவாக்கியவரும் தோனி ரசிகராக இருந்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தோனி இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். கீப்பர் பேட்டராக மட்டும் விளையாடிவருகிறார். முட்டியில் அறுவைச் சிகிச்சை செய்து முழுவதுமாக குணமாகாமல் விளையாடி வருகிறார்.

கிராபிக் இந்தியா, ஆர்க் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் படத்தை ஜீவன் ஜே காங்க், நவீன் ஜான் இயக்குகிறார்கள். இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மே 17ஆம் தேதி வெளியாககவிருக்கிறது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவமம் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT