முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

Updated On : 9 மே, 2024 at 12:14 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்த வாரம் கவினின் ஸ்டார், அர்ஜுன் தாஸின் ரசவாதி, அமீரின் உயிர் தமிழுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

திரையரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்ப்பதுபோல, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் இவானா நடிப்பில், யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட கதையம்சத்தில் உருவான கள்வன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் மே - 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமான ‘தி பாய்ஸ்’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், ஹிந்தி திரைப்படமான 8 ஏ.எம். மெட்ரோ ஜீ5 ஓடிடியிலும், தெலுங்கு மொழி திரைப்படமான கீதாஞ்சலி மல்லி வச்சிண்டி திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், அன்டர் தி பிரிஜ் என்ற இணையத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் இந்த வாரம் வெளியாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →