முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:48 PM
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:02 PM

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:02 PM

சத்தா பச்சா

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் வெளியான சத்தா பச்சா திரைப்படத்தில், நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று( பிப். 19) மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:02 PM

ஹாட் ஸ்பாட் - 2

ஹாட் ஸ்பாட் - 2 - படம்: X

ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

இந்தப் படத்தில், நடிகர்கள் அஷ்வின், எம்.எஸ்.பாஸ்கர், பிரியா பவானி சங்கர், ரக்‌ஷன், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படம் ஆஹா ஓடிடியில் வரும் நாளை(பிப். 20) வெளியாகிறது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:02 PM

லக்கி

நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான லக்கி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக நாளை வெளியாகிறது.

வளர்ப்பு நாயை மையப்படுத்தி உருவான இப்படத்தில் அனஸ்வரா ராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:04 PM

கென்னடி

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் “கென்னடி”. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்படம் நேரடியாக நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:18 PM

அமோஸ் அலெக்சாண்டர்

மலையாளத்தில் வெளியான கிரைம், திரில்லர் திரைப்படம் அமோஸ் அலெக்சாண்டர். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் ஜாபர் இடுக்கி, அஜு வர்கீஸ், தாரா அமலா ஜோசப் மற்றும் கலாபவன் ஷாஜோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:22 PM

ஒண்டிமுனியும் நல்லபாடனும்

கொங்கு வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மையப்படுத்தி ஒண்டிமுனியும் நல்லபாடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை சுகவனம். ஆர் இயக்கியுள்ளார்.

முதன்மைக் கதாபாத்திரத்தில் பரோட்டா முருகேசன் நடித்துள்ளார். மேலும், கார்த்திகேசன், சித்ரா நாகராஜன், விஜயன் தியா, வித்யா சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் சன் நெக்ஸ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:43 PM

கடந்த வார ஓடிடி ( மன ஷங்கர வரபிரசாத காரு)

நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ள மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படம் ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைனி ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:43 PM

தலைவர் தம்பி தலைமையில்

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இதில், நாயகியாக பிரார்த்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:43 PM

பேபி கேர்ள்

நடிகர் நிவின் பாலி - இயக்குநர் அருண் வர்மா கூட்டணியில் உருவான “பேபி கேர்ள்” திரைப்படத்தை சோனி ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

இந்தத் திரைப்படம் கடந்த ஜன. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:43 PM

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju)

நவீன் பொலிஷெட்டி, மீனாட்சி சௌத்ரி நடிப்பில் தெலுங்கில் மொழியில் வெளியான படம் அனகனக ஒக்க ராஜு.

நகைச்சுவை கலந்து குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:43 PM

தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் (The Conjuring Last Rites)

மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் திகில் பாணியில் எடுக்கப்பட்டு கடந்தாண்டு வெளியான திரைப்படம் தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்.

இந்தப் படம் தி கன்ஜூரிங் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது பாகமாகும். இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

summary

You can see which movies are releasing this week on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.