முகப்பு
செய்திகள்

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

Updated On : 11 மே, 2024 at 2:59 PM
பகிர்:

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், விக்ரம் 62 படத்தினை சித்தா பட இயக்குநர் சு. அருண்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, வீர தீர சூரன் எனப் பெயரிட்டுள்ளனர். நேரடியாக, படத்தின் இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளனர்.

இதன் பெயர் அறிவிப்பு டீசர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றதுடன் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று(மே. 11) வெளியிட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, சித்திக், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாமானிய மனிதனின் கதைக்களமே இப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் என்ற எதிர்பார்ப்பை போஸ்டர் மூலம் வெளிக்காட்டியுள்ளது படக்குழு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments