செய்திகள்

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

நடிகர் சூர்யா தன் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.

DIN

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, இயக்குநர் சுதா கொங்காரா படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால், அப்படத்தின் உருவாக்கத்துக்கு நீண்ட நாள் தேவைப்படுவதாக சூர்யா - 43 தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் - 44 படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்காக சூர்யா உடல் எடையைக் குறைத்து வருவதுடன் குதிரையேற்றப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தன் நற்பணி இயக்கத்தை விரிவுப்படுத்தி அதில் புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த பல மாவட்டங்களில் சூர்யா நற்பணி இயக்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்தந்த மாவட்டங்களில் வார்டு ரீதியாக நற்பணி இயக்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், நற்பணி இயக்கமாக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியாக உருவெடுத்தது.

சூர்யாவும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தி வருவதால் அவரும் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை சீசன்! சிறப்புப் பேருந்துகளை அறிவித்தது போக்குவரத்துக் கழகம்!!

டீ- ஏஜிங் ஸ்டார்... மலைக்கா அரோரா!

பிகாரில் பஞ்ச பாண்டவர் கூட்டணி: அமித் ஷா

களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது: அமைச்சர் கே.என்.நேரு

இந்தப் புன்னகை என்ன விலை... சந்தீபா தர்!

SCROLL FOR NEXT