ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து, டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமடைந்தார். தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
Advertisement
ஆனால், இப்படம் முதல்நாள் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது, இப்படம் முதல் மூன்று நாள்கள் முடிவில் உலகளவில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வளர்ந்துவரும் நடிகரான கவின், 4-வது திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய தொகையை வசூலாக ஈட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.