செய்திகள்

வாடிவாசல் அப்டேட்!

சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.

கங்குவாக்குப் பின் சுதா கொங்காரா படத்தில் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகும் என்பதால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையே, வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை என படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன், “விடுதலை - 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படத்தின் பணிகளை துவங்குவேன்” எனக் கூறியுள்ளார்.

இதனால், வாடிவாசல் திரைப்படத்தின் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT