முகப்பு
செய்திகள்

கங்குவா வெளியீடு அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 18 மே, 2024 at 4:28 PM
பகிர்:

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரம்மாண்ட பொருள் செலவில் உருவானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், கிராபிக்ஸ் பணிகளும் அதிகம் இருப்பதால் ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்திற்காக பணியாற்றி வருகின்றனர்.

ஆனாலும் கங்குவா படத்தின் அப்டேட் வெளியாகி நீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் சூர்யாவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் பெரிய அறிவிப்புகளுக்காகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →