செய்திகள்

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா.

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இது அவரது 12ஆவது படம். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

13ஆவது படமான ஃபேமலி ஸ்டார் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தினை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். இவர் ஷியாம் சிங்கா ராய் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது விஜய் தேவரகொண்டாவின் 14ஆவது படம்.

இதற்கடுத்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் 59ஆவது படதிலும் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கிறார். இதில்தான் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக பேச்சு வார்த்தை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தெலுங்கில் மீண்டும் சாய் பல்லவி நடித்து வருகிறார். நாக சைதன்யாவுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் - நடிகர் உதயா பெருமிதம்

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு!

SCROLL FOR NEXT