முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தன்னா நடிக்க உள்ளதாக தகவல்.

Updated On : 18 மே, 2024 at 2:48 PM
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 

காரணம், லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து சிபி இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கதை சரியாக இல்லாததால் ரஜினி விலகிக்கொண்டார். 

பின், சிபி சக்கரவர்த்தி  தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களில் கதை சொன்னதாகவும் நானியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைகூடவில்லை.

தற்போது, அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எஸ்கே - 24 படமாக உருவாகும் இதில் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில், இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →