நக்‌ஷத்ரா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பலநாள் கனவு... கார் வாங்கிய சின்னத்திரை நடிகை!

வாணி ராணி, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி ஆகிய தொடர்களில் நடித்தவர் நக்‌ஷத்ரா.

DIN

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நடிகை நக்‌ஷத்ரா சொகுசுக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தனது ஆசைகளில் (பக்கெட் லிஸ்ட்) ஒன்றாக இருந்த இந்தக் காரை அவர் வாங்கியதும், அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஜுலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை தமிழும் சரஸ்வதியும் தொடர் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தவர் நடிகை நக்‌ஷத்ரா. அவருக்கு ஜோடியாக நடிகர் தீபக் நடித்திருந்தார்.

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நக்‌ஷத்ரா - தீபக்

12ஆம் வகுப்பு படிப்பதற்கு முன்பு திருமணம் நடைபெறுவதால் படிக்க முடியாத சரஸ்வதிக்கும், தான் படிக்காததால், படித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் தமிழுக்கும் இடையிலான கதையே தமிழும் சரஸ்வதியும் தொடர்.

இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் நக்‌ஷத்ரா - தீபக் ஆகிய இருவரின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்றது.

சன் தொலைக்காட்சியின் வாணி ராணி, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி ஆகிய தொடர்களில் நடித்திருந்தாலும், தமிழும் சரஸ்வதியும் தொடர், நக்‌ஷத்ராவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. அனைத்து வயதிலும் நக்‌ஷத்ராவுக்கு தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை நக்‌ஷத்ரா

இதுமட்டுமின்றி சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, புலிவால், மிஸ்டர் லோக்கல், நம்பியார், ஹே சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களிலும் துணைப் பாத்திரங்களில் நக்‌ஷத்ரா நடித்துள்ளார்.

தனது சின்னச் சின்ன ஆசைகளை பட்டியலிட்டு நிறைவேற்றி வரும் நக்‌ஷத்ரா, தனது விருப்பத்தில் மிக முக்கியமானதாக இருந்த சொகுசுக் காரை தற்போது வாங்கியுள்ளார்.

புதிய காருடன் நடிகை நக்‌ஷத்ரா

கார் வாங்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். ''என்னவொரு அழகான கார். இந்த சொகுசுக்காரை சொந்தமாக்கிக்கொண்டதால் உருவாகும் உற்சாகத்திற்கு அளவே இல்லை. புதிய அனுபவத்திற்கான நேரம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT