செய்திகள்

மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்!

யூடியூபர் இர்ஃபான் அவரது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை சமீபத்தில் அறிவித்தார்.

DIN

யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததற்கு மன்னிப்பு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் துபைக்குச் சென்ற இர்ஃபான், அங்குள்ள மருத்துவமனையில் அவரது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கான பரிசோதனை மேற்கொண்டார்.

அந்த பரிசோதனை முடிவை குடும்ப நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும் வெளியிட்டு, அதனை விடியோவாக பதிவிட்டு அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அதனை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி இர்ஃபான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக மருத்துவத்துறை சார்பில் விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு சம்மன் அனுப்பப்பட்டதுடன், விடியோவை உடனடியாக நீக்கக் கோரி யூடியூப் நிர்வாகத்துக்கும், சைபர் குற்றப்பிரிவுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, இர்ஃபானின் யூடியூப் தளத்தில் இருந்து விடியோ நீக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT