செய்திகள்

அவதூறு கருத்துகளை தெரிவிக்க சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை!

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகை சுசித்ராவின் நேர்காணலொன்று சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில், தன் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனக் கூறினார்.

இந்த நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவைக் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். முக்கியமாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அதேநேரம், சுசித்ரா கூறியதில் உண்மை இருக்கலாம் என்கிற ரீதியில் பலரும் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாரைக் கிண்டலடித்து வருவதுடன் இருவரையும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து, இன்னொரு நேர்காணலையும் அளித்தார். அதில், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தனக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக் குமார் தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை பாடகி சுசித்ரா பேசி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மேலும், தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதை சுசித்ரா நிறுத்த வேண்டும் என்றும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கார்த்திக் குமார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT