செய்திகள்

கங்குவா காட்சிகளைப் பார்த்த அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்துள்ளார்.

DIN

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், கிராபிக்ஸ் பணிகளும் அதிகம் இருப்பதால் ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்திற்காக பணியாற்றி வருகின்றனர்.

ஆனாலும் கங்குவா படத்தின் அப்டேட் வெளியாகி நீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் சூர்யாவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் பெரிய அறிவிப்புகளுக்காகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய தனஞ்செயன், “கங்குவா படத்தின் சில காட்சிகளை நடிகர் அஜித் பார்த்து மகிழ்ந்தார். அதற்காக, இயக்குநர் சிவாவை பாராட்டினார். குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பின் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பார்” எனக் கூறியுள்ளார்.

இதனால், மீண்டும் அஜித் - சிவா கூட்டணி இணைய உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT