முகப்பு
செய்திகள்

வெளியானது மோகனின் ‘ஹரா’ பட டிரைலர்

Updated On : 25 மே, 2024 at 10:04 PM
பகிர்:
Updated On : 25 மே, 2024 at 10:02 PM

மோகன் நடித்துள்ள 'ஹரா' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். ஏற்கெனவே இவர் ‘தாதா 87’, ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவுவை பிரகத் முனியசாமி மேற்கொண்டுள்ளார்.

Advertisement

இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் பாணியில் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.