முகப்பு
செய்திகள்

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

பேட்ரியாட் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு....

Updated On : 4 ஏப்ரல் 2026, 6:48 pm IST
பகிர்:

நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள “பேட்ரியாட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் “பேட்ரியாட்”. இப்படத்தை, முன்னணி இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஆக்சன் திரில்லர் வகை திரைப்படமான இதன் டிரைலர் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், மம்மூட்டி மற்றும் மோகன்லாலின் சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டுள்ளது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

summary

actor mammootty, mohanlal's patriot movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.