செய்திகள்

பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தனது பெற்றோரை சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

DIN

விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவந்த நடிகர் விஜய், கடந்த பிப்வரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

2023 -2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, தவெக தலைவர் விஜய், விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்வி விருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு முழுநேர அரசியலில் நடிகர் விஜய் ஈடுபடவுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில், விஜய் தனது பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திர சேகரை இன்று(மே 27) சந்தித்துள்ளார். விஜய் சந்தித்த புகைப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

ஹாட்ரிக் தங்கப் பந்து விருது வென்ற பொன்மட்டி..! முதல் வீராங்கனையாக சாதனை!

காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் உள்ளது: ஆஸி. கேப்டன்

தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!

SCROLL FOR NEXT